அஞ்சல் பெட்டியில் குளவி கூடு அகற்றுமாறு கோரிக்கை…!

கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு செல்லும் நுழைவாயில் பகுதியில் உள்ள ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில் அமைந்துள்ளது மதுபான உற்பத்தி நிலையம் அருகில் உள்ள அஞ்சல் பெட்டியில் குளவி கூடு கட்டி உள்ளது.

அந்த பகுதியில் தற்போது கடும் வெப்பமான காலநிலை தோன்றுவதால் எந்த நேரமும் அந்த அஞ்சல் பெட்டியில் உள்ள குளவிகள் அப் பகுதியில் செல்லும் நோயாளிகள் மற்றும் ஏனையவர்கள் நிழற்குடை பகுதியில் நிற்பவர்களை தாக்க கூடும் ஆகையால் அந்த குளவி கூட்டை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.