அதிவேக விபத்தில் இளைஞர் பலி!! ஒருவர் படுகாயம்

அகலவத்தை – பதுரலிய வீதியில் ஜீவராணி சந்திக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அதில் மோட்டார் சைக்கிளை ஓடிவந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அகலவத்தை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சாமிக்க லக்ஷான் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் அகலவத்தை பகுதியிலிருந்து பதுரலிய வீதியில் பதுரலிய நோக்கி இரவு பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது

அதிவேக விபத்தில் இளைஞர் பலி!! ஒருவர் படுகாயம் - Tamilwin News அதிவேக விபத்தில் இளைஞர் பலி!! ஒருவர் படுகாயம் - Tamilwin News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here