அதிஷ்டம், பரிசுப்பொருள் உங்களுக்கு கிடைத்துள்ளது என தொலைபேசிமூலம் பணமோசடி செய்து ஏமாற்றியவர் கைது

அதிஷ்டம், பரிசுப்பொருள் உங்களுக்கு கிடைத்துள்ளது என தொலைபேசிமூலம் அழைத்து மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில பணமோசடி செய்து ஏமாற்றிய பண்டாரகம அட்டுளுகம, பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை யாழ் விசேட குற்றவிசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரால் நேற்று கைதுசெய்யப்பட்டார்.

யாழ்மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு அதிஷ்டகார் ஒன்று கிடைத்துள்ளதாக Ez Case மூலம் 24 லட்சம் ரூபா மோசடி செய்து கையடக்க தொலைபேசி மூலம் உரையாடி பெற்றமை, தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின்படி விசாரணைகளை மேற்கொண்டு குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

இப்படியாக பெரிய மற்றும் சிறிய தொகைகளில் ஏராளமானவர்கள் வடபகுதியில் ஏமாற்றப்பட்டுள்ளமை தெரியவருகிறது.

இவ்வாறான மோசடிக் கும்பலிடம் அகப்பட்டு ஏமாறாமல் விழிப்புடன் இருக்குமாறும், அவ்வாறான தொடர்புகள் கிடைக்கும் போது சாதுரியமாக செயற்பட்டு உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிப்பது இவ்வாறான குற்றச் செயல்களில் மேலும் ஈடுபடுபவர்களை இனம் காண உதவும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.