அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஹவாய் தீவுக் கூட்டத்தின் பிக் ஐலண்ட் பகுதியில் ரிக்டர் 5.7 அளவுகோலில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அந்தப் பகுதியில் நன்கு உணரப்பட்டுள்ளன.

இருப்பினும், நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியதாக நிலையில், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது