Home Uncategorized அமெரிக்கா சென்ற மைத்திரி.!

அமெரிக்கா சென்ற மைத்திரி.!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா ஊடாக அமெரிக்கா சென்றதை கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர், திங்கட்கிழமை (12) அதிகாலை 02.50 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸின் ஏஐ-284 விமானத்தில் இந்தியாவின் புதுடெல்லிக்குச் சென்று, அங்கிருந்து மற்றொரு விமானத்தில் அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் செல்கிறார்.

மைத்திரிபால சிறிசேன அதே கட்சியைச் சேர்ந்த மேலும் இரு அதிகாரிகளை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும், அவர்கள் அங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல பொதுக் கூட்டங்களை நடத்த உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பணிப்பாளர் பிரபாத் மாதரகே தெரிவித்தார்.

Exit mobile version