இன்னும் இருபது வருடங்களுக்கு ரணில் ஆட்சியே-எவரும் இனி அசைக்கமுடியாது..!

எதிர்வரும் இருபது வருடங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமே இந்நாட்டில் பதவியில் இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து கருத்துரைத்த அவர்; ”எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமோக வெற்றியீட்டுவார்.

இலங்கை வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர் என்ற புதிய சாதனையுடன் ரணில் ஜனாதிபதி பதவியில் மீண்டும் அமர்வார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் ஒப்பீடு செய்யக்கூடிய உலகத் தலைவர்கள் எவரும் இல்லை. சர்வதேச மட்டத்தில் பலம்வாய்ந்த உலகத் தலைவர்களை விடவும் ரணில் விக்ரமசிங்க முன்னிலை வகிக்கின்றார்.

ரணில் தேர்தலில் போட்டியிடுகின்றார் என்றவுடன் அனைவரும் ஒன்றிணைந்து அவரை தோற்கடிக்க முயற்சிக்கின்றனர்.

ஏனெனில் அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அச்சம் கொண்டுள்ளனர்.

ஆனாலும் எதிர்வரும் பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு ஆட்சியை கைப்பற்றுவதைப் பற்றி யாரும் நினைத்துக்கூடப் பார்க்க வேண்டாம்.

குறைந்த பட்சம் இன்னும் இருபது வருடங்கள் வரை ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமே இந்த நாட்டில் இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.