இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி..!{15.2.2024}

மேஷம்
aries-mesham
எல்லா விதத்திலும் ஏற்றம் தரும் நாள். இனிமையான, மற்றும் சாதுர்யமான பேச்சாற்றலால் காரியங்களை சாதித்திக் கொள்வீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், உறவுக்குள் குழப்பம் உண்டாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும்.
மிதுனம்
gemini-mithunum
ஆரோக்கியம் மேம்படும். தனவரவு அதிகரிக்கும், பெண்களிடம் எதிர்பார்த்த இலாபங்கள் கிடைக்கும். டாக்டர்கள் கைவிட்ட கேஸ்கூட துள்ளி எழும். நோய் நீங்கிச் சுகம் ஏற்படும்.
கன்னி
virgo-kanni
வழக்கு விவகாரங்களைந் தள்ளிப் போடுவது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால் மட்டுமே பதவி உயர்வும் கிடைக்கும். எதிலும் நிதானமாக நடக்கவேண்டிய சந்திராஷ்டம நாள். எச்சரிக்கை தேவை.
மகரம்
capricorn-magaram
அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். முன்னேற முயலுங்கள். வெற்றி உங்கள் பக்கம். வயிறு சம்பந்தமான உபாதைகள் எழலாம். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
கடகம்
cancer-kadagam
வேலை இல்லாதவர்களுக்கு புதிய வாய்ப்புக்கள் தேடிவரும். நினைப்பதெல்லாம் நினைத்தபடி நடக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். தனவரவு கூடும்.
சிம்மம்
leo-simmam
பக்தி மார்க்கத்தில் மனம் லயிக்கும்.. தெய்வபக்தியால் மனநிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருவருளாலும், குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
துலாம்
libra-thulam
பேச்சால் பெருமாளையும் அசத்திவிடுவீர்கள். அப்படி இருக்கையில் வருமானத்திற்குக் கேட்கவேண்டுமா ? வளமான வாழ்வும், வாகன யோகமும் உண்டு. வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட்டால் இழப்பைத் தவிர்க்கலாம்.
மீனம்
pisces-meenam
நிம்மதி என்றால் என்னவென்று தேடவேண்டிய நிலை ஏற்படும். பெண்களால் பணவிரயம் ஏற்படலாம். இயலாமையால் அனைவரின் மேலும் ஒரு தேவையற்ற வெறுப்பு ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
பங்குச்சந்தை விவகாரங்களில் நாட்டம் ஏற்படும். எவ்வளவு நன்றாக உழைத்தாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. உங்கள் உடமைகளைப் பாதுகாப்புடன் வைத்துக்கொள்வது நல்லது.
விருச்சிகம்
scorpio-viruchagam
வம்பு செய்தவர் வழிவிட்டு ஒதுங்குவர். கேட்காமலே உதவ முன்வருவர் நண்பர்கள். வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் மனதில் எழும். அதற்காக எதிர்பார்த்த கடன்கள் எளிதில் கிடைக்கும்.
கும்பம்
aquarius-kumbam
எல்லா முயற்சிகளிலும் எளிதில் வெற்றி கிட்டும். மனதில் மகிழ்ச்சியும் தெம்பும் அதிகரிக்கும். குழந்தைகள்பால் அன்பைப் பொழிவீர்கள். புதிய நண்பர்களின் உதவி கிடைக்கும்.