Today Horoscope இன்றைய ராசி பலனை (நவம்பர் 24, 2024 ஞாயிற்று கிழமை) இன்று சந்திரன் பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று மகரம் ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்
இன்றைய ராசிபலன் 24.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 9, ஞாயிற்று கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள சேர்ந்த திருவோணம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உடன் பிறந்தவர்களின் அன்பும், பாசமும் கிடைக்கும். அவர்களின் ஆலோசனை உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சற்று மோசம் அடையும். இன்று குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணியிடத்தில் சில மாற்றங்கள் வேண்டியது இருக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பிடித்த சில நபர்கள் உங்கள் வீட்டிற்கு வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும், இன்று பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். வெளி உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்ப்பது அவசியம். வியாபாரம் தொடர்பாக சிலரின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வேலை தொடர்பான பயணங்கள் நற்பலனை தரும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பெற்றோர் அல்லது மேலதிகாரிகளின் ஆசீர்வாதம் கிடைக்கும். உங்கள் செயலில் முன்னேற்றம் இருக்கும். இன்று உங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. மனைவியின் முழு ஆதரவை பெறுவீர்கள். வண்டி வாகன பயன்பாட்டில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் பணபலம் கிடைக்கும். பணியிடத்தில் வேலை பல அதிகமாக இருக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று போட்டி தேர்வு, விளையாட்டு போட்டி போன்ற விஷயங்களில் மாணவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். தொழில் துறையில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு. உணவு மற்றும் பானங்களில் கூடுதல் கவனம் தேவை. வயிறு தொடர்பான பிரச்சனை உங்களுக்கு தொந்தரவு தரும். இன்று பிள்ளைகளின் பொறுப்பை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டிய நாள். இன்று உங்களின் வரவை விட செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையின் ஆதரவு மன தைரியத்தைத் தரும். இன்று திடீரென சில பண பலன்கள் பெற்று மகிழ்வீர்கள். இன்று குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சில சலசலப்புகள் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். மேலதிகாரிகளின் ஆதரவால் உங்கள் வேலையை சிறப்பாக செய்து முடிக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகளின் திருமணம் சார்பாக இருந்த தடைகள் நீங்கும் அரசுத்துறை தொடர்பான வேலைகள் சிறப்பாக முடியும். வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள். உங்களின் திட்டமிட்ட வேலைகள் வேகமாக முடிக்க முடியும். பணியிடத்தில் எந்த ஒரு முடிவையும் கவனமாக எடுக்கவும். சமூக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் எந்த முடிவு செய்யும் பிறரின் அழுத்தத்தால் எடுக்க வேண்டாம். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடித்து மகிழ்வீர்கள். சக ஊழியர்களின் ஆறுதலை தரும். வணிகம் தொடர்பான பயணங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்களின் கோபத்தை கட்டுப்படுத்திச் செயல்படுவது நல்லது.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடிய நாள். பணியிடத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். இன்று பிறரிடம் பண பரிவுதனை செய்ய நினைத்தால் கவனமாக செயல்படவும். குடும்ப பொறுப்புகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களின் நிலுவையில் உள்ள வேலைகள் முடிக்க முடியும். இன்று சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று வண்டி, வாகன பயன்பாட்டில் கவனமாக இருக்கவும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீக ஸ்தலத்திற்குச் சென்று வருவீர்கள். உங்கள் பிள்ளைகளின் செயல்பாடு மகிழ்ச்சியை தரும். இன்று குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வேலையை முடிப்பதில் கவனமாக இருக்கவும். இன்று சந்திராஷ்டமம் என்பதால் எந்த விஷயத்திலும் கவனமாக இருக்கவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று இந்த நாட்களாக எதிர்பார்த்த நல்ல விஷயம் நடக்கும். மாணவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். சொத்து வாங்குதல், விற்பது தொடர்பாக ஆவணங்களைச் சரி பார்க்கவும். பணியிடத்தில் பெண்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். குடும்ப உறுப்பினர்களின் பிரச்சினைகளை தீர்க்க நினைப்பீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிடவும், அவர்களுடன் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. குடும்ப வியாபாரத்தில் முன்னேற்றத்தை காண்பீர்கள். மாணவர்கள் படிப்பில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவார்கள். பெற்றோர்களின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். இன்று மாலையில் சில நல்ல செய்தி தேடி வரும்.