இன்றைய ராசி பலன் : 25 நவம்பர் 2024 – Daily Horoscope

Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (நவம்பர் 25, 2024 திங்கட் கிழமை) இன்று சந்திரன் பகவான் சிம்ம ராசியில் பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று மகரம் ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

இன்றைய ராசி பலன் : 25 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 25.11.2024 குரோதி வருடம் கார்த்திகை 10, திங்கட் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள சேர்ந்த திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களை எதிர்காலம் தொடர்பான கவலை அதிகரிக்கும். பணியிடத்தில் சில சிறிய தகவல்கள் கூட, பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். இன்று நலம் விரும்பிகளின் ஆலோசனை உங்கள் கவலையை தீர்க்க உதவும். குடும்ப உறுப்பினர்களின் திருமணம் தொடர்பாக இருந்த தடைகள் நீங்கும். எந்த ஒரு முயற்சிகளிலும் சாதகமான பலன்கள் உண்டாகும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த சூழல் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. காதல் உறவு வலுப்படும். வியாபாரம் தொடர்பாக பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. இன்று புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் எச்சரிக்கையான அணுகுமுறை அவசியம்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் பிறரின் பாராட்டு கிடைக்கும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அது தொடர்பான அலைச்சல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடு மன ஆறுதலைத் தரும். வெளியூர், வெளிநாடு தொடர்பான பயணங்கள் நற்பலனை தரக்கூடியதாக அமையும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செல்ல நினைப்பீர்கள். உங்கள் வேலைகள் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிப்பதில் கவனம் தேவை இல்லையெனில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். நிதிநிலை வலுவாக இருக்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கக்கூடிய நாள். கல்வி, வேலை தொடர்பாக வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. கல்வி தொடர்பாக சில சிரமங்கள் சந்திக்க நேரிடும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சில முக்கிய மாற்றங்கள் செய்ய வாய்ப்புள்ளது. இன்று குடும்பத்தில் குழந்தைகளுடன் விளையாடி மகிழும் வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று. சில நாட்களை விட இன்று சிறப்பானதாக இருக்கும். இன்று நாள் முழுவதும் உங்கள் செயலில் வெற்றியும், வியாபாரத்தில் லாபமும் கிடைக்கும். உங்கள் நிதிநிலை வலுவாக இருக்கும். பிள்ளைகளின் செயலை கண்டு மகிழ்வீர்கள். இன்று வீண் பேச்சை தவிர்க்கவும். இன்று மனதில் தேவையற்ற பதற்றம் ஏற்படும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் தொடர்புடையவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாள். அரசு வேலையில் பல சலுகைகள், நன்மைகள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் துணையின் புரிதல் மகிழ்ச்சியைத் தரும். இன்று பணியிடத்தில் யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். எதிரிகள் விஷயத்தில் கவனமாக செயல்படவும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். தேவையற்ற மன வருத்தம் ஏற்படும். தொழிலில் அதிக லாபம் மீட்ட வாய்ப்பு உள்ளது. உங்கள் செயல் மற்றும் பேச்சில் கட்டுப்பாடு தேவை. இன்று பிறரின் ஆலோசனை மற்றும் செல்வாக்கின் பெயரில் உங்கள் பணத்தை முதலீடு செய்வதே தவிர்க்கவும். இல்லை எனில் தேவையற்ற பண இழப்பு ஏற்படும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பெற்றோரிடம் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று உங்களின் சூழ்நிலை மகிழ்ச்சியானதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் திருமணம் தொடர்பான முக்கிய முடிவுகள் இருப்பீர்கள். கூட்டுத்தொழில், வியாபாரம் தொடர்பாக சாதகமான சூழ்நிலை இருக்கும். நிறைய லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலை தொடர்பான மிகவும் சிறப்பான நாளாக அமையும். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். இன்று உறவினர்களின் உதவி கவலையை தீர்க்கும். வியாபாரத்தில் கவனமாக செயல்படவும். இன்று எதிர்பார்த்த லாபம் கிடைத்து மகிழ்வீர்கள். சமூகம் பணிகள், ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். இன்று அதிக அலைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளதால் உங்கள் பேச்சு, செயலில் கவனம் தேவை. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். நிதிநிலை பலப்படும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் மதிப்பு அதிகரிக்கும். பெற்றோர், பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். உங்களின் கடின உழைப்பால் எதிர்பார்ப்பை வெற்றியை பெறுவீர்கள். புதிய தொழிலை தொடங்க நினைப்பீர்கள். துணையின் முன்னேற்றத்தை கண்டு மகிழ்வீர்கள். அரசாங்க துறையில் உள்ளவர்கள் முன்னேற்றத்தை அடைவார்கள். அரசு தொடர்பான வேலைகள் சிறப்பாக முடியும்.