Today Horoscope இன்றைய ராசி பலனை (நவம்பர் 27, 2024 புதன் கிழமை) இன்று சந்திரன் பகவான் கன்னி ராசியில் அஸ்தம், சித்தரை நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று கும்பம் ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.
இன்றைய ராசி பலன் : 27 நவம்பர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 27.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 12, புதன் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசியில் உள்ள சதயம், பூரட்டாதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பிறருக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இன்று தொண்டு, தானம் செய்வதில் கொஞ்சம் பணம் செலவிடுவீர்கள். பணியிடத்தில் சில மாற்றங்கள் காரணமாக சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். இன்று உங்கள் பேச்சில் கூடுதல் கவனமும், மென்மையை அவசியம். உடல் நலக்குறைவால் சற்று அலைய வேண்டியது இருக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். இன்று உங்கள் நண்பர்கள், உறவினர்களிடமிருந்து சில நல்ல செய்திகள் தேடி வரும். வீட்டில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று நினைத்ததை விட பணம் அதிகமாக செலவிட வாய்ப்பு உள்ளது. தந்தையுடன் இருக்கக்கூடிய மன வருத்தம் பேசி தீர்த்துக் கொள்ளவும். கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பெற்றோரின் ஆசீர்வாதம் அல்லது உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். இன்று விலை உயர்ந்த பொருட்கள் அல்லது சொத்துக்கள் வாங்கும் விருப்பம் நிறைவேறும். விருந்து விழாக்களில் பங்கேற்பீர்கள். இன்று உங்கள் வண்டி, வாகனம் தொடர்பாக செலவுகள் அதிகரிக்கும். முடிந்த வரையில் பயணங்களை தவிர்க்கவும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப சொத்து, பணம் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். உடன் பிறந்தவர்களுடன் உறவில் உள்ள விரிசல் நீங்கும். மாணவர்கள் கல்வி தொடர்பான அழுத்தத்திலிருந்து விடுபட வாய்ப்புள்ளது. இன்று ஆன்மீக தரிசனம் செய்த மகிழ்வீர்கள். இன்று எந்த ஒரு முக்கிய முடிவுகளும் அவசரப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு எடுக்க வேண்டாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சமுதாயத்தில் புதிய அடையாளத்தை பெறுவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் கொடுத்த கடன் தொகை திரும்ப பெறலாம். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் செயல் கண்டு மகிழ்வீர்கள். இன்று குடும்பத்துடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. இன்று வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் தொழிலுக்கு உதவியாக இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வெற்றி கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சமூக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் மரியாதை, கௌரவம் அதிகரிக்கும். மனைவியின் ஆதரவை பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் மூத்தவர்களின் உதவியால் பிரச்சனைகள் தீரும். இன்று ஏதேனும் ஒரு விஷயத்தில் பணத்தை முதலீடு செய்யும் நினைப்பவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்யக்கூடியவர்கள் புதிய வருமான வாய்ப்புகள் பெறுவார்கள். உங்களின் நிதிநிலை வலுவாக இருக்கும். பணியிடத்தில் அதிகமாக அலைச்சல் ஏற்படும். உங்களின் ஆரோக்கிய பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்வித் துறையில் சிறப்பான சாதனையை படைக்கவும் முடியும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வேலை வாய்ப்பு முயற்சிகளில் எதிர்பார்த்த சாதக பலன்கள் கிடைக்கும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழிலில் முன்னேற்றமான சூழல் இருக்கும். இருப்பினும் கணக்கு வழக்குகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பாதகமான சூழ்நிலையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி செயல்படவும். நண்பர்களுடன் உல்லாசமாக நேரத்தை கழிப்பீர்கள். இன்று சிலரால் மன அழுத்தம் சந்திக்க வாய்ப்புள்ளது.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் முக்கிய விஷயங்களை கொஞ்சம் பணம் செலவிடுவீர்கள். உறவினர்களுடன் பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். மாணவர்கள் கல்வி தொடர்பாக புதிய வாய்ப்புகள் பெறுவீர்கள். நீதிமன்ற வழக்குகள் தொடர்பான விஷயத்தில் வெற்றி வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் எதிரிகளிடம், போட்டியாளர்களிடம் கவனமாக இருக்கவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் வெளியூர், வெளிநாட்டுக்கு கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பாக செல்ல வாய்ப்புள்ளது. வியாபாரம் தொடர்பாக சில நல்ல மாற்றங்கள் பெறுவீர்கள். கடன் வாங்க நினைப்பவர்களுக்கு எளிதாக பணம் கிடைக்கும். குடும்பப் பொறுப்புக்கள் நிறைவேற்றி மகிழ்விர்கள். ஆன்மீக யாத்திரை செல்ல வாய்ப்புள்ளது.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகளின் உடல்நல குறைவு தொடர்பாக அலைச்சல் ஏற்படும். இன்று எதிர்பார்த்ததை விட செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சு, செயலில் கவனம் தேவை. இன்று சட்டபூர்வமான விஷயங்களில் கவனமாக செயல்படவும். முக்கிய முடிவுகள், புதிய விஷயங்களை தவிர்ப்பது நல்லது. இன்று எதிலும் நிதானத்துடன் செயல்படுவது அவசியம்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்கள். பெற்றோரின் ஆலோசனை உங்கள் செயல்பாட்டிற்கு உதவும். மாலை நேரத்தில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று சில மகிழ்ச்சியான தகவல் தேடிவரும். உங்கள் துணைக்கு பரிசு வழங்க நினைப்பீர்கள். தொழில் தொடர்பான முதலீடு செய்வதை சில காலம் ஒத்திவைக்கவும்.