Today Horoscope இன்றைய ராசி பலனை (நவம்பர் 28, 2024 வியாழக் கிழமை) இன்று சந்திரன் பகவான் துலாம் ராசியில் சித்திரை, சுவாதி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று கும்பம், மீனம் ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.
இன்றைய ராசி பலன் : 28 நவம்பர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 28.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 13, வியாழக் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம், மீனம் ராசியில் பூரட்டாதி, உத்திரட்டாதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் வேலையை முடிப்பதில் அலைச்சல் ஏற்படும். குடும்பத் தொழிலில் வளர்ச்சியை சந்திக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். குடும்ப வாழ்க்கையில் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகளை நீங்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உறவு மேம்பட பேச்சில் கவனம் தேவை. இன்று திருமணம், சுப நிகழ்ச்சி என மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று தேர்வுக்கு தயாராக கூடிய மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். நீங்கள் எதிர்பார்த்த வெற்றி அடைய முடியும். உங்கள் வேலையில் சிலரின் தலையீட்டால் தடைகள் ஏற்படும். இடமாற்றம் தொடர்பான முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுக்கு குறித்த விவாதம் நடக்கும். குடும்ப உறவில் உள்ள சிக்கல்கள் தீரும். வணிகத்தில் லாபத்தை அடைய வாய்ப்பு உள்ளது.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வேலையை மாற்ற முயற்சி செய்யக் கூடியவர்களுக்கு எதிர்பார்க்க வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் சரியான நேரத்தில் வேலையை முடித்து பாராட்டு பெறுவீர்கள். தாயின் உடல் நிலையில் கவனமாக இருக்கவும். இன்று வெளி உணவுகளை தவிர்ப்பது அவசியம். வியாபாரத்தில் அபாயகரமான முதலீட்டில் ஈடுபட வேண்டாம். பிறரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டாலும், யோசித்து நிதானமாக முடிவு நீங்களே எடுக்கவும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று பணிபுரியும் இடத்தில் வேலையை முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். உங்களின் சிறப்பான செயல்பாட்டுக்கு பாராட்டு கிடைக்கும். இன்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நிதிநிலை வலுவாக இருக்கும். அரசாங்க வேலை தொடர்பான விஷயங்கள் விரைவாக நடக்கும். சகோதரர்களின் உதவியாளர் குடும்பப் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்ற முடியும். இன்று புதிய வணிக ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் புதிய லாபகரமான ஒப்பந்தங்கள் பெறுவீர்கள். நிதிநிலை மேம்படுத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனமாக உழைக்க வேண்டிய நாள். பணியிடத்தில் உத்தியோகஸ்தர்கள் சில தடைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இன்று பிறரிடம் எச்சரிக்கையுடன் அணுகவும். சகோதர, சகோதரிகளின் திருமணம் தொடர்பாக இருந்த தடைகள் நீங்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டு.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தலைமையில் இருந்து வேலை செய்தாலும் சிறப்பான வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று பெற்றோரின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். இன்று உங்கள் வேலை தொடர்பாக மன அழுத்தம் குறையும். கோபத்தை கட்டுப்படுத்தி செயல்பட வேண்டிய நாள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தொழிலில் புதிய திட்டங்களை தொடங்க சிறப்பான வெற்றி நிச்சயம். மாணவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். தந்தையின் வழிகாட்டுதல் படி நீங்கள் செய்யக்கூடிய வேலையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் கண் தொடர்பான பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்புள்ளது. உங்களின் பழைய கடன்கள் அடைத்து மகிழ்வீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் துணை, குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. உங்களின் மரியாதை அதிகரிக்கும். பணியிடத்தில் எதிர்பார்த்த வேலைகள் சிறப்பாக செய்து முடிக்க முடியும். உங்கள் சிறப்பான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பிறரின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று தொழிலில் நீங்கள் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும். இல்லையெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. உங்கள் செயலில் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். பணம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நாள். மாணவர்கள் உயர் கல்விக்கான வாய்ப்புகள் அமையும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சொத்து தொடர்பான வழக்குகளில் சாதக பலன்கள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக அதிக லாபத்தை பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் உங்கள் உறவில் இனிமை நிறைந்திருக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைத்த மகிழ்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் தொடர்பாக திடீர் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. இன்று உங்கள் வேலை மற்றும் எந்த ஒரு செயலிலும் கவனத்துடன் செயல்படவும். உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். உணவு விஷயத்தில் அக்கறை தேவை. அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். இன்று பொறுமையுடன் செயல்பட்டால் சிறப்பான வெற்றியை பெறலாம், தந்தையின் ஆலோசனை உங்கள் வெற்றிக்கு உதவும், வியாபாரத்தில் சிறிது ரிஸ்க் எடுக்க வேண்டிய சூழல் இருக்கும். இன்று நீங்கள் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் கடன் விஷயத்தில் கவனம் தேவை.