இராணுவப் படையணிகளுக்கு இடையிலான புதியவர் கபடி போட்டி

12 படையணிகளை சேர்ந்த 108 வீரர்கள் கலந்து கொண்ட இராணுவப் படையணிகளுக்கிடையிலான புதியவர் கபடிப் போட்டி கடந்த 21 மற்றும் 22ஆம் திகதிகளில் பனாகொட உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றதுடன், பொறியியல் சேவைகள் படையணி அனைவரையும் தோற்கடித்து சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றது.

பொறியியல் சேவைகள் படையணி மற்றும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதுடன் கடுமையான போட்டிகளுக்குப் பிறகு, இலங்கை இராணுவ பொறியியல் சேவைகள் படையணி சாம்பியன் பட்டத்தையும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி இரண்டாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.

இப் போட்டியின் பிரதம அதிதியாகக் இலங்கை இராணுவ நிதி முகாமைத்துவ பணிப்பக பணிப்பாளர் நாயகமும் இராணுவ பொது சேவை படையணியின் படைத்தளபதியும் மற்றும் இராணுவ கபடிக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஏஎம்கேஜி பிரியந்த சத்ய குமார அபேசிங்க அவர்கள் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.