குறித்த விபத்தானது, நேற்று (05) இரவு 7.30 மணியளவில் பிபில – அம்பாறை வீதியில், நாகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிபிலையிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும், பின்னால் அதே திசையில் சென்ற பஸ்ஸுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு பஸ்ஸின் தனியார் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் சிலர் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
2 பஸ்களிலும் பயணித்த 47 பயணிகள் விபத்தில் காயமடைந்து பிபில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ், ஊழியர்கள் இறங்குவதற்காக நின்ற போது மற்ற பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.