கயந்த கருணாதிலக்க எம்.பி. கட்சி தாவலா?

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் அக்கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து வைபவமொன்றில் கலந்து கொண்டுள்ளார்.ஜனாதிபதியுடன் இணைந்து அவர் பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டமை அரசியல் அணி மாற்றம் ஒன்றின் முன்னறிவிப்பாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.