Home இலங்கை செய்திகள் காதலர் தினத்தில் காதலியுடன் வாக்குவாதம்-காதலன் விபரீத முடிவு-இலங்கையில் சோகம்..! மு

காதலர் தினத்தில் காதலியுடன் வாக்குவாதம்-காதலன் விபரீத முடிவு-இலங்கையில் சோகம்..! மு

இறக்குவானை பிரதேசத்தில் காதலியால் ஏற்பட்ட மனவேதனையால் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

இறக்குவானையை சேர்ந்த சத்தியசீலன் அரவிந்த் பிரசாத் என்ற 21 வயதுடைய இளைஞனே தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனவும்,

அவரது தந்தை கொழும்பு பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாகவும், மேலும் இரு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த திடீர் மரணம் தொடர்பில் உயிரிழந்த இளைஞனின் உறவினர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

யுவதி ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும், சம்பவத்திற்கு முந்தினம் இரவு தனது காதலியுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த அழைப்பின் பின்னர் சகோதரர் சத்தமாக அழுததாகவும், நாளை காதலர் தினத்தை கொண்டாட இறக்குவானைக்கு வருமாறு தனது காதலியை இளைஞன் பலமுறை அழைப்பதை கேட்டதாகவும் இறந்தவரின் சகோதரி ஒருவர் தெரிவித்தார்.

சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கஹவத்தை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டார்.

Exit mobile version