காயங்களுடன் நிர்வாணமான நிலையில் திருமணமாகாத பெண்ணின் சடலம் மீட்பு

ஹன்வெல்ல வெலிகன்ன, உலிவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இரத்தக் கறைகளுடன் அறையில் பெண் ஒருவரின் சடலம் இன்று (05) நிர்வாணமான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் அதிகாரிகள் குழு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்த மரணம் கொலையாகவோ அல்லது சந்தேகத்திற்கிடமான மரணமாகவோ இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், குறித்த மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஹன்வெல்ல, வா வெலிகன்ன, உலிவத்த பகுதியைச் சேர்ந்த தங்கல்லயைச் சேர்ந்த டோனா மலானி என்ற 70 வயதுடைய திருமணமாகாத பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here