காரைநகரில் சிறுமி துஷ்பிரயோகம் – கைதுக்குப் பயந்து சந்தேகநபர் உயிரைவிட முயற்சி!

சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டப்பட்ட ஒருவரைப் பொலிஸார் கைது செய்ய முயன்றபோது, அவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் காரைநகரில் நடந்துள்ளது.

தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றவர் தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மனைவியின் சகோதரியின் மகளைத் துஷ்பிரயோகம் செய்தார் என்றே சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. முறைப்பாட்டுக்கு அமைய இன்று (செப்ரெம்பர் 3) பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்யச் சென்றபோதே அவர் உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

தற்போது சிகிச்சை பெற்றுவரும் அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டவில்லை என்று கூறப்படுகின்றது. சந்தேகநபருக்கு மருத்துவமனையில் பொலிஸார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here