காரை ஸ்டார்ட் பண்ண சாவி தேவையில்லை ஸ்மார்ட்போனே போதும்.. எப்படி?

2024ம் ஆண்டுக்காக அப்டேட் செய்யப்பட்ட அல்கஸார் ஃபேஸ்லிப்ட் மாடலை செப்டம்பர் 9ம் தேதி இந்தியாவில் வெளியிடவிருக்கிறது ஹூண்டாய். இந்தக் காரில் கொடுக்கப்படவிருக்கும் வசதிகள் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறது அந்நிறுவனம். இந்நிலையில் இந்தக் காரில் கொடுக்கப்படவிருக்கும் தொழில்நுட்ப வசதிகள் தான் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. முக்கியமாக NFC வசதியுடன் கூடிய டிஜிட்டல் கீ வசதியானது (Digital Key) வசதியானது இந்தக் காரின் தனித்துவமான அம்சமாக இருக்கிறது.

NFC வசதியுடன் கூடிய டிஜிட்டல் கீ:

இந்த டிஜிட்டல் கீ வசதியுடன், ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட்வாட்சைக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்ய முடியுமாம். மேலும், டோரை லாக் செய்வது மற்றும் அன்லாக் செய்வதையும் ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட்வாட்சைக் கொண்டே செய்ய முடியுமாம். அதற்கு NFC வசதியுடன் கூடிய நமது ஸ்மார்ட்போனையோ, ஸ்மார்ட்வாட்சையோ டோர் ஹேட்டிலில் லேசாக தொட்டால் போதும்.

ஆனால் அதற்கு காரின் டிஜிட்டல் கீ நம்முடைய ஸ்மார்ட்போனில் அல்லது ஸ்மார்ட்வாட்சில் இருக்க வேண்டும். இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த டிஜிட்டல் கீயை மூன்று நபர்களுடன் நாம் பகிர்ந்து கொள்ள முடியும். அந்த டிஜிட்டல் கீயைக் கொண்டே வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் காரை ஓட்டலாம். மேலும், நம்மிடம் இருக்கும் சாதனங்களில் ஏழு சாதங்கள் வரை இந்த டிஜிட்டல் கீயை லிங்க் செய்து கொள்ள முடியுமாம்.

அல்கஸாரில் உள்ள தொழில்நுட்ப வசதிகளை:

புதிய அல்கஸார் மாடலில் தொழில்நுட்ப வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது ஹூண்டாய். அந்த வகையில் டிரைவர்ஸ் டிஸ்பிளே மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்காக இரண்டு 10.25 இன்ச் டிஸ்பிளேக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளேவுடனே இன்-பில்ட் நேவிகேஷன் மற்றும் மல்டிலிங்குவல் யூஸர் இன்டர்பேஸ் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இதனால் பத்து பிராந்திய மொழிகள் மற்றும் இரண்டு சர்வதேச மொழிகளில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை நம்மால் பயன்படுத்த முடியும். இத்துடன் தொடுதல் அடிப்படையிலான கட்டுப்பாட்டுடன் கூடிய டூயல் ஸோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதியும் புதிய அல்கஸார் ஃபேஸ்லிப்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட கனெக்டிவிட்டி வசதிகள்:

ப்ளூலிங்க் தொழில்நுட்பத்தின் மூலம் 70-க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் வசதிகளைக் கொண்டிருக்கிறது ஹூண்டாய் அல்கஸார். இந்தக் காரில் 270-க்கும் மேற்பட்ட வாய்ஸ் கமாண்டுகள் எம்பெட் செய்யப்பட்டிருக்கின்றன. அவை, இணைய வசதி இல்லாமலேயே இயங்கும் வகையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயற்கையின் ஒலிகளை காருக்குள்ளேயே கேட்கும் வகையிலான வசதியையும் புதிய அல்கஸாரில் கொடுத்திருக்கிறது ஹூண்டாய். காடுகளின் ஒலி, மழையின் ஒலி மற்றும் இனிமையான மாலை நேரத்தில் ஒலியை காரின் ஸ்பீக்கர்கள் மூலம் கேட்க முடியும்.

அல்கஸாரில் கொடுக்கப்பட்டிருக்கும் பிற வசதிகள்:

புதிய 2024 அல்ஸகார் ஃபேஸ்லிப்டின் டிரைவர்ஸ் கன்சோலில் மேக்னடிக் பேடு ஒன்றும், இரண்டாம் வரிசை இருக்கையில் இருப்பவர்களுக்கு வயர்லெஸ் சார்ஜிங் பேடு ஒன்றும் இந்தக் காரில் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்தக் காரில் வாய்ஸ் கமாண்டு மூலம் இயங்கும் பனோரமிக் சன்ரூஃப், ரெயின்-சென்சிங் வைப்பர்கள் மற்றும் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் ப்ரீயமிம் சவுண்டு சிஸ்டம் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.