பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம்
கன்னியாகுமாரி உலகின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது, உலகம் முழுவதிலும் இருந்த தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயத்தை காண வருகை தருகின்றனர், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் சார்பாக விவேகானந்தர் மண்டபத்திற்கு, கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் திருவள்ளுவர் சிலையை அருகில் சென்று பார்ப்பதற்கு கப்பல் போக்குவரத்து உதவுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கப்பலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கடந்த சில நாட்களாக கடலின் நீர்மட்டம் சீராக இல்லாததால் நீர் நிலையின் தாழ்வு காரணமாகவும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. குமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர், கடல் நீர்மட்டம் சீரான நிலையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து வழக்கம் போல தொடங்கப்பட்டது.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
சுற்றுலாப் பயணிகள் படகில் சவாரி செய்வதற்காக படகு குழாம் வாயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமாரியில் குவிந்த நிலையில் சூரிய உதயத்தை கண்டு செல்பி மற்றும் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா படகு சேவை தாமதம்
இந்நிலையில் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய சுற்றுலா படகு சேவை தாமதமானது சவாரி செய்ய ஆவலுடன் சுற்றுலாப் பயணிகள் காத்திருந்த நிலையில் கடலின் தன்மையை பொறுத்து பத்து மணிக்கு மேல் சுற்றுலா படகு சேவை தொடங்கும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டது.
போலீசார் பாதுகாப்பு பணி
கடல் மட்டம் சீரான பிறகு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என சுற்றுலாப் பயணிகள் ஒரு சிலர் காத்திருந்தனர் ஆனால் பலரும் ஏமாற்றத்துடன் மீண்டும் திரும்பி சென்றனர். கன்னியாகுமாரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதினால் அங்கு எந்த நேரத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
திற்பரப்பு அருவி
மேலும் குமரியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டால் படகு சேவை நிறுத்தம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது, மேலும் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குமரி திற்பரப்பு அருவியில் குளிக்க மக்கள் வருகை தருகின்றனர், அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தால் மாவட்ட நிர்வாகம் சார்பாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படும்.