கெஹெலிய பதவி விலகினார்!

சுற்றாடல் அமைச்சுப் பதவியை கெஹெலிய ரம்புக்வெல்ல இராஜினாமா செய்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
தரமற்ற மருந்துகொள்வனவு மோசடியில் ஈடுபட்டாரென்ற குற்றச்சாட்டில் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு, தற்போது சிறைச்சாலைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையிலேயே அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.