Home LOCAL NEWS கைதான யோஷித ராஜபக்ஷவிற்கு விளக்கமறியல்

கைதான யோஷித ராஜபக்ஷவிற்கு விளக்கமறியல்

502
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ, கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று (25) ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனவரி 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள ரூ.3 1/2 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக 2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

தற்போது தொடரப்பட்டுள்ள இந்த காணி வழக்கின் பிரதான சந்தேகநபர், யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபோரஸ்ட் என்ற பெண் ஆவார்.

இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here