Home இலங்கை செய்திகள் கொழும்பு பாதுகாப்பு கூட்டு குழுமத்தின் ஸ்தாபக ஆவணங்கள் நேற்று கைச்சாத்து

கொழும்பு பாதுகாப்பு கூட்டு குழுமத்தின் ஸ்தாபக ஆவணங்கள் நேற்று கைச்சாத்து

24கொழும்பு பாதுகாப்பு கூட்டுக் குழுமத்தின் (Colombo Security Conclave) ஸ்தாபக ஆவணங்களில் கைச்சாத்திடுவதற்காக இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ​மொரீஷியஸில் 2023 டிசம்பரில் நடைபெற்ற

Colombo Security Conclave தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான 6ஆவது மாநாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் Colombo Security Conclave செயலகத்தை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் சாசனமும் இந்தியா, மாலைதீவு, மொரீஷியஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளால் நேற்று 30ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதில் Colombo Security Conclave இன் முக்கிய வகிபாகத்தை மேலும் வலுவாக்குவதில் ஸ்தாபக ஆவணங்களின் முக்கியத்துவம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சுட்டிக்காட்டினார். அத்துடன் ஒத்துழைப்பின் பல்வேறு காரணிகள் முழுவதிலும் ஸ்திரமான ஈடுபாட்டை உறுதிப்படுத்துவதில் Colombo Security Conclave இன் வகிபாகத்தை இங்கு சுட்டிக்காட்டிய அவர், இந்துசமுத்திர பிராந்தியத்தில் பாரம்பரிய, பாரம்பரியமல்லாத மற்றும் வளரும் கலப்பு சவால்களை முறியடிப்பதில் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவம் தொடர்பாகவும் வலியுறுத்தினார்.

கொழும்புக்கான அவரது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்தார்.

அத்துடன் இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இப்ராஹிம் லதீப் உள்ளிட்ட Colombo Security Conclave அங்கத்துவ நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார்.

அது மட்டுமல்லாமல் அவர் கொழும்புக்கான விஜயத்தை மேற்கொண்ட காலப்பகுதியில் எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கா, ஏனைய அரசியல் தலைவர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பிராந்தியங்கள் உள்ளிட்ட பகுதிகளின் பல்வேறு அரசியல் கட்சிகளினது பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினரையும் அவர் சந்தித்தார்.

Exit mobile version