கோர விபத்து-கணவர் ஸ்தலத்திலே பலி-கதறி துடித்த மனைவி-மலையகத்தில் சம்பவம்..!

கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக (கிளினிக்) தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் அலதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வியாழக்கிழமை (15) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், குருநாகல், மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த கீர்த்தி பண்டார என்ற 43 வயதுடைய நபரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கண்டியில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த ஜீப் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி கல்வெட்டில் மோதி மீண்டும் வீதியை நோக்கி வந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை கண்டி அலதெனிய பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.