Home இலங்கை செய்திகள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு – இலங்கை தமிழரசுக் கட்சி அறிவிப்பு

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு – இலங்கை தமிழரசுக் கட்சி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று (01) இடம்பெற்ற நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எம்.ஏ சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் இன்றைய கூட்டத்தில் அரியநேத்திரனுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும், தமது கட்சியைச் சேர்ந்த அரியநேத்திரன் தமிழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக அதிலிருந்து விலக வேண்டும் என்றும், சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் மூன்று தீர்மானங்களை தமிழரசுக் கட்சி நிறைவேற்றியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version