Home JAFFNA NEWS சட்டவிரோதமாக  கொண்டு செல்லப்பட்ட சுண்ணக்கற்கள் மீட்பு

சட்டவிரோதமாக  கொண்டு செல்லப்பட்ட சுண்ணக்கற்கள் மீட்பு

269
0

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமேந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில்   சுண்ணக்கற்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறித்த நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார் .

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அன்மைய நாட்களில் மந்துவில் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல்ய கட்டடப்பொருள் விற்பனை செய்யும் வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தியில் சட்டவிரோதமான முறையில்  சுண்ணக்கற்களை  அகழ்ந்து செல்வதாக பிரதேச மக்களால் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது,

நேற்றைய தினம் வியழக்கிழமை  இரவு 10.15 மணியளவில் நுணாவில் பகுதியில் வைத்து குறித்த வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தியை மறித்து சோதனையிட்ட போது அனுமதிப்பத்திரம் இன்றி கற்கள் எற்றிச் சென்றமையினை தொடர்ந்து குறித்த பாரவூர்துயை சாவகச்சேரி  காவல்துறையினரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here