சற்று முன் நிறுத்தி வைக்கப்பட்ட கார் தீக்கிரை..!

வாதுவை, பொத்துப்பிட்டிய காலி வீதி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று  தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (13) பகல் இடம்பெற்றுள்ளது.

களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவைச் சேர்ந்த  தீயணைப்பு வீர்ரகள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.