சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் கைது

சிறுமி ஒருவர் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய விவகாரத்தில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகம, குருகுலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தாக்குதலுக்கு உள்ளான 17 வயது சிறுமியின் மாற்றாந்தாய் எனவும், சிறுமியின் தந்தை வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் கைது - Tamilwin News

தாக்குதலுக்கு உள்ளான 17 வயது சிறுமிக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, தாக்கியதாக கூறப்படும் பெண்ணுக்கு 09 வயதில் ஒரு பெண் பிள்ளை இருப்பதாகவும், தந்தை வெளிநாட்டில் தொழில்புரிவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.