சுகாதார அமைச்சின் அதிகாரியான இளம்பெண்ணிற்கு காதலரால் நிகழ்ந்த கோரம்!

சுகாதார அமைச்சில் முக்கிய பொறுப்பில் உள்ள 32 வயதான இளம் பெண்ணொருவரின் வீட்டிற்குள் புகுந்த காதலர், அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். பலத்த காயங்களுக்கு உள்ளாகிய இளம்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.

வீடியகொட மொஹொட்டிகொட பிரதேசத்தில் உள்ள வீட்டில் இந்த சம்பவம் நடந்தது.

வீட்டின் வரவேற்பறையில் பெரிய அளவில் இரத்தக் கறைகள் இருந்ததாகவும், பெண்ணின் தலை முடி வெட்டப்பட்டு காணப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்

அந்த இளம்பெண்ணின் காதலர், பொலிசாரிடம் சரணடைந்த பின் கைது செய்யப்பட்டதாகவும் மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் சந்தேக நபருடன் இணைந்து வாழ்ந்து வந்த குறித்த அதிகாரி, ஒரு வருடமாக இந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.

காதலர் ஏற்கெனவே திருமணமானவர் என்பதும், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு சுகாதார அமைச்சின் அதிகாரியை திருமணம் செய்ய எதிர்பார்த்திருந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுகாதார அமைச்சின் அதிகாரியான இளம் பெண் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாக, திருமணம் செய்து கொள்ளவிருந்த நபருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிய வந்ததையடுத்து, கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.

பதுரலியவில் உள்ள தனது தோட்டத்திற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய சந்தேகநபர் நேற்று அதிகாலை வீடு திரும்பியதுடன் உத்தியோகத்தர் உறங்கிக் கொண்டிருந்த போது முன்பக்க ஜன்னல் கண்ணாடியை உடைத்து வீட்டினுள் நுழைந்து கூரிய ஆயுதத்தால் பல தடவைகள் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டிற்கு வந்து 1990 ஆம்புலன்சுக்கு போன் செய்து அவரை வெத்தறை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கும் போது , இளம்பெண் கையால் தடுத்த போது அவரது விரல் துண்டாகி தரையில் விழுந்துள்ளது. தரையில் விழுந்த துண்டான விரலை அந்த இளைஞன் பையில் போட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளார்.

சந்தேகநபர் வீட்டிற்குள் பிரவேசித்த ஜன்னலுக்கு அருகாமையில் தரையில் பொலித்தீன் பையில் கூரிய ஆயுதங்கள் பலவற்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.