Home இலங்கை செய்திகள் ஜனாதிபதி தேர்தல் கடமை; 54,000 பொலிஸார் களத்தில்

ஜனாதிபதி தேர்தல் கடமை; 54,000 பொலிஸார் களத்தில்

25ஜனாதிபதி தேர்தலில் 54,000 பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை

குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் கட்டவுட்களை நீக்குவதற்காக 1,500 தொழிலாளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சட்டவிரோத தேர்தல் பிரசார செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறிருக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 118 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளன. இந்நிலையில் கடந்த ஜூலை 31ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 28ஆம் திகதிவரை பெறப்பட்ட தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,347 ஆக உயர்ந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளில் 1,285 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பானதென தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, இதற்கு மேலதிகமாக வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 6 முறைப்பாடுகளும், இதர சம்பவங்கள் தொடர்பில் 56 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Exit mobile version