தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம் இந்நிலையில் இந்த ஆண்டு விருதுநகர் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது, அதனால் அனைத்து மாவட்டங்களிலும் தற்காலிக பட்டாசு கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிர படுத்த வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி வருகின்றது.
வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்க உள்ள தற்காலிக பட்டாசு கடைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட பட்டாசு கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
பட்டாசு தொழிற்சாலை
குறிப்பாக சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகின்றது ஆனால் வட மாநில ஆடார்கள் எதுவும் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு இல்லை எனவும் பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
மேலும் இந்த ஆய்வில் பட்டாசு கடைகளில் வாலிகளில் மணல் மற்றும் தண்ணீர் ஆகியவை வைத்திருக்க வேண்டும், தீ தடுப்பு கருவி, மின் இணைப்புகள் பழுது இல்லாமல் இருக்க வேண்டும், கடைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதா என்பதை உறுதி செய்து வருகின்றனர்.
ஆலோசனை கூட்டம்
மாவட்ட தோறும் தற்போது ஆட்சியர் அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு தற்காலிகமாக உரிமம் வழங்குவது, பட்டாசு கடை உரிமையாளர்களின் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
பட்டாசு கடைகள்
அந்த கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்ட பிறகு அந்தந்த மாவட்டங்களில் எந்த இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்க வேண்டும், ஒரே இடத்தில் எத்தனை கடைகள் அமைக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
பட்டாசு விற்பனை
தற்காலிகமாக பட்டாசு கடை அமைக்க முறையான அனுமதி பெற்ற பிறகு கடை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் பட்டாசு விற்பனை இந்த மாதத்தில் இருந்தே ஒரு சில பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்ட நடைமுறைகளை பின்பற்றி பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.