பிக்பாஸ் போட்டியாளர்கள் : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து பல்வேறு நடிகர் நடிகைகளின் பெயர் கமலஹாசன் பெயருக்கு மாற்றாக இணைய பக்கங்களில் வட்டமடித்தது.
உண்மை என்னவென்றால் அப்படி வைரலான அனைத்து நடிகர்களிடமும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருக்க முடியுமா…? என விசாரித்து இருக்கிறது பிக்பாஸ் குழு என்று தான் கூறுகிறார்கள்.
ஆனால் கடைசியாக மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியை பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக டிக் அடித்துள்ளது பிக் பாஸ் குழு. பிக் பாஸ் எந்த அளவுக்கு சர்ச்சையான ஒரு போட்டி என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
வார இறுதி நாட்களில் போட்டியாளர்களை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். இந்த வேலைக்கு நடிகர் விஜய் சேதுபதி சரியாக வருவாரா..? போட்டியாளர்களை மிரட்டினால் போட்டியாளர்கள் பயப்படுவார்களா…? விஜய் சேதுபதிக்கு இது எதிராக மாறிவிடுமா…? அல்லது இதனை சமாளித்து பிக் பாஸ் மூலம் விஜய் சேதுபதி இன்னொரு உயரத்தை எட்டிப் பிடிப்பாரா…? என்று ஏகப்பட்ட விவாதங்கள் சமூக வலைதள பக்கங்களில் பார்க்க முடிகிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது குறிப்பாக இரண்டு போட்டியாளர்கள் முக்கியமான போட்டியாளர்களாக பார்க்கப்படுகிறார்கள்.
ஒன்று இணைய பிரபலம் டிடிஎஃப் வாசன் இன்னொருவர் லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பாளரும் பிரபல தொகுப்பாளினி மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தர்.
டிடிஎஃப் வாசன் எந்த அளவுக்கு சர்ச்சைக்கு உள்ளானவார் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர் தும்மினாலே சர்ச்சை தான் என்ற ஒரு நிலையை நம்மால் பார்க்க முடியும்.
சமீபத்தில் கூட திருப்பதி சுவாமி தரிசனத்திற்காக சென்ற அவர் மற்றும் அவருடைய நண்பர்கள் அங்கிருந்த பக்தர்களிடம் பிராங்க் செய்த வீடியோ ஒட்டுமொத்த தென்னிந்திய முழுதும் வைரலாகி டிடிஎஃப் வாசனுக்கு எதிரான கடுமையான குரல்கள் எழுந்தன.
இத்தனை நாட்கள் இவர் மீது வேண்டுமென்று நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், இவர் செய்யக்கூடிய வேலைக்கு இதெல்லாம் தேவை தான் என்று பலரும் சலித்துக் கொண்டார்கள்.
சமீபத்தில் கர்நாடக மாநிலம் குடகு மாநிலத்தில் உள்ள ஒரு குளத்தில் குளிக்க சென்ற டிடிஎஃப் வாசனிடம் அந்த பகுதியில் இருந்த லோக்கல் ஆட்கள் சிலர் சண்டைக்கு வந்த வீடியோ காட்சிகளும் வெளியான இப்படி வெளியில் இருக்கும் போதே சர்ச்சைக்கு பாத்திரமாக இருக்கும் டிடிஎஃப் வாசன் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க கடந்த பிக் பாஸ் போட்டிகளை தன்னுடைய இணைய பக்கத்தில் விமர்சனம் செய்து வந்த ரவீந்தர் போட்டியாளராக மாறி இருக்கிறார்.
ஒவ்வொரு பிக் பாஸ் எபிசோடையும் தனிப்பட்ட முறையில் யார் யார் என்ன செய்தார்கள் என்பதை விமர்சிக்கும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார் லிப்ரா ப்ரோடுக்ஷன் ரவீந்தர்.
இந்நிலையில் தற்போது அவரையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக மாற்றியிருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகின்றன. இதில் சிக்கல் என்னவென்றால் ரவீந்திரன் ஒரு இடத்தில் அமர்ந்தால் அவரை எழுப்பி விடுவதற்கு இரண்டு பேர் வேண்டும். கழிவறையை பயன்படுத்தும் போது.. தூங்கி எழும்போது… என அவருக்கு இருக்கக்கூடிய சில உடல்நல பிரச்சனைகள் குறித்தும் சமீபத்தில் அவரே ஒரு வீடியோவில் பேசியிருந்தார்.
வழக்கு ஒன்றில் கைதான அவர் புழல் சிலையில் அடைக்கப்பட்டார். அங்கே கடும் துயரங்களை அடைந்ததாக தன்னுடைய பேட்டியில் பதிவு செய்திருந்தார் ரவீந்தர்.
இந்நிலையில், இவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கிறார் என தெரிகிறது. கூடுதலாக இணையத்தில் சமீபத்தில் வரும் இன்ஸ்டாகிராம் சஞ்சய் ராமசாமி என்று கூறப்படும் திவாகர் என்ற ஒருவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.