தலைமன்னாரில் மாயமான இரு கடற்றொழிலாளர்கள்!! தேடிச்சென்றவர்கள் அந்தரிப்பு!

தலைமன்னாரில் கடற்றொழிலுக்கு சென்ற இரு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.

தலைமன்னாரில் கடற்றொழிலுக்காக படகு ஒன்றில் சென்ற இரு கடற்றொழிலாளர்கள் கரை திரும்பாத நிலையில் தலை மன்னார் கடற்றொழிலாளர்கள் குறித்த கடற்றொழிலாளர்களை தேடி வருகின்றனர்.

கடந்த (12.09.2023)செவ்வாய்கிழமை மாலை 07.30 மணி அளவில் தலைமன்னார் கிராம கடற்கரையிலிருந்து வட கடலில் இரு கடற்றொழிலாளர்கள் ஒரு படகில் வலிச்சல் மூலம் கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர்.

எனினும் குறித்த இரு கடற்றொழிலாளர்களும் வழமையாக கரை திரும்பும் நேரத்தில் கரை திரும்பாததால் இருவரையும் சக கடற்றொழிலாளர்கள் கடலில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னாரில் மாயமான இரு கடற்றொழிலாளர்கள்!! தேடிச்சென்றவர்கள் அந்தரிப்பு!

காணாமல் போன இரு கடற்றொழிலாளர்களும் தலைமன்னார் ஊர்மனையைச் சேர்ந்தவர்கள் எனவும் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான ஜே.நிக்சன் டிலக்ஸ் கூஞ்ஞ மற்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரி. சுமித்திரன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த இருவரும் நேற்று மாலை வரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கடற்றொழிலாளர்களை தேடிச் சென்ற படகுகளில் இரு படகுகள் கடல் கொந்தளிப்பு மற்றும் கடும் காற்றின் காரணமாக கச்சத்தீவில் தரித்து நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த கடற்றொழிலாளர்களை தொடர்ந்தும் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here