தாய் கொண்டு வந்த மதுபான போத்தலால் நேர்ந்த கதி !

வத்தேகம சிரிமல்வத்த பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற 5 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் நேற்று (25) மதியம் நீராடியக் கொண்டிருந்த போது மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவர் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தேகம பிரதேசத்தில் வசிக்கும் 19 வயது மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன இரு இளைஞர்களை தேடும் பணியை பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இளைஞர்கள் ஒருவரின் தாயார் வெளிநாட்டில் இருந்து கடந்த தினம் இலங்கை திரும்பியதாகவும், அவர் கொண்டு வந்த வெளிநாட்டு மதுபான போத்தலை குடித்துவிட்டு ஆற்றில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.