திருச்சி அருகே சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட பள்ளி மாணவி பலியான விவகாரம்… 800 கிலோ காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்!

திருவெறும்பூர்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் கீழ அம்பிகாபுரத்தில் வசித்து வருபவர் ஜாக்குலின் பள்ளி மாணவி இரவு நேரத்தில் நூடுல்ஸ் மற்றும் கோக் சாப்பிட்டதாக கூறப்படுகின்றது,

இந்நிலையில் அவர் மர்மமான முறையில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி உயிரிழந்தார், வெகு நேரம் ஆனா நிலையில் பள்ளி மாணவி எழுந்திருக்கவில்லை என்பதால் அவருடைய உறவினர்கள் சென்று பார்த்த பொழுது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.

சைனீஸ் நூடுல்ஸ்

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு செய்தனர் அப்போது சைனீஸ் நூடுல்ஸ் என்பது கண்டறியப்பட்டது மேலும் மாணவி அமேசான் மூலம் அந்த நூடுல்ஸ் வாங்கியுள்ளார், சைனீஸ் நூடுல்ஸ் திருச்சி மொத்த வியாபாரம் செய்யும் ஒரு உணவாக வணிகத்தில் இருப்பதை கண்டறிந்தனர்.

நூடுல்ஸ் ஒன்று சட்டபூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து மொத்த விற்பனையாளரின் உணவு வணிகத்தை ஆய்வு செய்த பொழுது காலாவதியான உணவு பொருட்கள் சுமார் 800 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்த உணவு வணிகத்திற்கு தற்காலிகமாக சீல்

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 800 கிலோவையும் அதியமங்கலம் குப்பை கிடங்கில் போட்டு அளிக்கப்பட்டனர், இந்த சம்பவத்தில் பேட்ச் எண் கொண்ட கோக் குளிர்பானத்தையும் சட்டபூர்வ உணவு மாதிரி எடுத்துள்ளனர்.

மொத்த உணவு வணிகத்தை தற்காலிகமாக சீல் வைத்து கடையின் உரிமையாளர் மீது, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 இன் படி வழக்கு தொடர்ந்தனர்.

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி கந்தவேல், மகாதேவன், வடிவேல், ஹர்ஷவர்த்தினி, சினேகா, சீபா ராஜகுமாரி மற்றும் சையது இப்ராஹிம் ஆகியோர் உடன் இருந்தனர். இது குறித்து மாவட்ட நியமன அலுவலர்கள் கூறுகையில் வணிகர்கள் காலாவதியான பொருட்களை தங்களது விற்பனை வளாகத்தில் வைத்திருக்கக் கூடாது காலாவதியான பொருட்களை வைத்திருக்கும் பட்சத்தில் தனி அறை ஒன்றில் பொருட்களை வைத்திருக்க வேண்டும்.

அதிகாரிகள் எச்சரிக்கை

அந்த அறை எண்ணை குறிப்பிட்டு இருக்க வேண்டும் அதற்கான பதிவேடுகள் முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யவில்லை என்றால் உணவு பாதுகாப்பு தர சட்டம் 2006 சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.