திருமலையில் பெரும் சோகம்-இருவர் பலி..!

திருகோணமலை – கிண்ணியா, மகாவலி ஆற்று பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

17 மற்றும் 35 வயதுடைய இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீன்பிடிப்பதற்காக இவர்கள் பயன்படுத்திய படகு மகாவலி ஆற்று பகுதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.