Home Uncategorized தேர்தலை ஒத்திவைக்க இடமளிக்க மாட்டோம்.!

தேர்தலை ஒத்திவைக்க இடமளிக்க மாட்டோம்.!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் போர்வையில் இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் அட்டவணையை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் இடமளிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ‘மக்களின் வாக்குரிமையை அழிக்க முற்பட்டால் அதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் என்ற பெயரில் ஜனாதிபதி தனது பதவிக் காலத்தை நீடிக்கச் செய்யும் குறும்புத்தனமான நோக்கங்களுக்கு சமகி ஜன பலவேகய பிடிபடாது’ என அவர் மேலும் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எஸ்.ஜே.பி இன்னும் இருப்பதாகவும், ஆனால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன் என்ற போர்வையில் மக்களின் ஆணையையும் வாக்களிக்கும் உரிமையையும் அழிக்க அனுமதிக்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். 2024ல் நடக்கவிருக்கும் தேர்தலும் நடக்க வேண்டும்.

Exit mobile version