ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த 25ஆவது மக்கள் வெற்றி பேரணியானது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பூகொட நகரில்
நேற்று முன்தினம் (29) மாலை நடைபெற்ற போதே அவர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“புத்தபெருமானினதும் மகாநாயக்க தேரர்களினதும் ஆசீர்வாதத்துடன் சமூகமயமான தலைமைத்துவத்துடன் அனைவரையும் வெற்றி பெற செய்கின்ற திட்டங்கள் உள்ளடங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தையே நாம் வெளியிட்டிருக்கின்றோம்.
நிபுணர்கள், தொழில் வல்லுநர்கள், கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள், கீழ் மட்டத்திலுள்ளவர்களின் சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்று இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம்வரை காணப்படுகின்ற இலஞ்சம், ஊழல், திருட்டு என்பவற்றை ஒழித்து மக்களை பாதுகாக்கின்ற யுகத்தை எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி உருவாக்குவோமென தலதா மாளிகை முன்னிலையில் உறுதிமொழி அளித்திருக்கின்றோம்.
நம்மிடம் ஜனரஞ்சகமான தத்துவமும் திறமையான சிறந்த குழுவும் இருக்கின்றது. விவசாயிகள், மீனவர்கள், பெண்கள், இளைஞர்கள், சிறியோர், முதியோர் உள்ளிட்ட அனைவரையும் ஒன்று சேர்த்து அவர்களை பலப்படுத்தும் நோக்கில் இந்த விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற உடனே இந்த மண்ணுக்கான நிதர்சனத்தை உண்மைப்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.