தேவா-வாக களமிறங்கும் சூப்பர் ஸ்டார்.. கூலி படத்தின் புதிய போஸ்டர்.!

Coolie

சென்னை : இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரஜினி நடிப்பில் காந்த 1991 ஆம் ஆண்டு வெளிவந்த “தளபதி” படத்தில் தேவா கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். தற்போது, 33 வருடங்களுக்கு பின், அந்த பெயரில் ரஜினி நடித்து வருகிறார். தேவாவாக நடிக்கும் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடிகர்களான நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன் மற்றும் சௌபின் ஷாஹிர் உள்ளிட்டொருடன் சத்யராஜ் மற்றும் உபேந்திரா இணைந்துள்ளனர்.

இப்படத்தில் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சத்யராஜ், 1986 ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் பரத் படத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணைந்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

இப்படத்தின் மூலம் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக இணைந்துள்ளனர். இந்த புதிய கூட்டணி காரணமாக இப்படத்தின் எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியிருக்கிறது.