Home இலங்கை செய்திகள் நாடாளுமன்றம் செல்ல கெஹலிய மறுப்பு

நாடாளுமன்றம் செல்ல கெஹலிய மறுப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவர் பங்கேற்க மறுத்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பான விசாரணையை அடுத்து, முன்னாள் சுகாதார அமைச்சர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து நேற்று இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version