ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
‘நாமலின் தொலைநோக்கு’ எனும் தொனிப்பொருளில் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
தனது கொள்கை அறிக்கையை வெளியிட்ட அவர், நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் நாட்டில் உள்ள பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்றார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த நாமல்,
” அடுத்த 10 வருடங்களுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்க அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம்.
தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் வரி வருவாயையும் அதிகரிக்க முடியும்.
நாட்டின் வங்கி முறைக்கு வெளியே உள்ள பொருளாதாரத்தை வங்கி அமைப்பாக மாற்றி 03 ஆண்டுகளுக்குள் தேர்தல் மேடையிலிருந்து மோசடி மற்றும் ஊழல் முழக்கத்தை அகற்ற பாடுபடுவேன்” என உறுதியளித்தார்.