Home ᴋɪʟɪɴᴏᴄʜᴄʜɪ ɴᴇᴡꜱ நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து!

நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து!

172
0

முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற முழங்காவில் வைத்தியசாலைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விபத்துகுள்ளாகியுள்ளது.

பூநகரிக்கும் பரந்தனுக்கும் இடைப்பட்ட பகுதியில், நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்தின் மீது மோதி ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளாகியது. இந்நிலையில் ஆம்புலன்ஸின் முன் பக்கம் மிகவும் சேதமடைந்துள்ளது.

அந்த ஆம்புலன்ஸ் தொடர்ந்தும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டதால் நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்கு கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here