பசறையில் வீட்டு தோட்டத்தில் கஞ்சா வளர்த்த இளைஞன் கைது!

பசறை பகுதியில் 100 கஞ்சா செடிகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெமேரியா A பிரிவு, மாத்தன்னை டிவிஷன் பகுதியில் வீட்டு தோட்டம் ஒன்றில் கஞ்சா பயிரிடுவதாக பசறை ஆக்கரத்தன்ன பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடிப் படையின் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது பயிரிடப்பட்டிருந்த 1 அடி உயரமுள்ள 100 கஞ்சா செடிகளும் 9 கிராம் காய்ந்த கஞ்சாவும் விஷேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் டெமேரியா A மாத்தன்னை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரையும் கஞ்சா செடிகளும் பசறை பொலிஸ் நிலையத்தில் விஷேட அதிரடிப் படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய தினம் பசறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here