பதினாறு வயதுடைய 2 சிறுமிகள் மாயம்: பொலிஸார் தேடுதல் வேட்டை

நன்னடத்தை திணைக்களத்தின் மேற்பார்வையில் பிபில பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுமிகள் காப்பகத்தில் இரண்டு சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக சிறுமிகள் இல்லத்தின் உதவி கண்காணிப்பாளர் பிபில பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச் சிறுமிகள் தெபல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயின்று வருவதாகவும், பாடசாலைப் பைகளை வகுப்பறையில் வைத்துவிட்டு பாடசாலையை விட்டு வெளியேறியதாகவும், சிறுவர் இல்ல உதவி காப்பாளருக்கு அதிபர் அறிவித்ததையடுத்து அவர்கள் திரும்பவில்லை என அறியமுடிகின்றது,

அனாதை இல்லத்திற்கு, உதவி காப்பாளர் பிபில பொலிஸ் முறைப்பாடு செய்தார். பதினாறு வயதுடைய இரு சிறுமிகள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. சிறுமிகளைத் தேடுவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிபில பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here