பிரபல போதைப்பொருள் வியாபாரி கைது

15,750 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் காத்தான்குடியில் நேற்று (1) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை வஸ்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம் . சியாம் தெரிவித்தார்.

நேற்று இரவு 11 மணியளவில் காத்தான்குடி ஊர்வீதி மறைக்கார் வேனில் ஐஸ் போதைப் பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் குறித்த வியாபாரி காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை வஸ்து ஒழிப்பு பிரிவு பிறப்பதிகாரி எச். எம். சியாம் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் மடக்கி பிடிக்கப்பட்டார்.

குறித்த வியாபாரியிடம் இருந்து 59,900 ரூபாய் ரொக்க பணமும், இரண்டு கையடக்க தொலைபேசிகள் ஒரு மோட்டார் சைக்கிள் உட்பட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

புதிய காத்தான்குடி ஹொஸ்டல் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட 43 வயது உடைய மேற்படி சந்தேக நபர் நீண்ட நாட்களாக போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலையம் போதை வஸ்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச் எம் சியாம் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here