பிள்ளைகளைத் தாக்கி வீடியோ எடுத்தவர் கைது

தனது இரண்டு பிள்ளைகளை கொடூரமாகத் தாக்கி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட தந்தை ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாக திம்புல்ல பத்தனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸார் தெரிவித்தார்.

திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள தனது மனைவி வீட்டில் வசிக்கும் 33 வயதுடைய நபர் கடந்த திங்கட்கிழமை 09 மற்றும் 05 வயதுடைய தனது இரண்டு பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் நிலையக் கட்டளைத் தளபதி தெரிவித்தார்.

இதற்கமைய, பிள்ளைகளின் தாயார் வெளியூரில் இருப்பதாகவவும், பிள்ளளைகள் பாட்டியின் பராமரிப்பில் இருப்பதாகவும், பிள்ளைகளின் கொழும்பில் உள்ள கார் சுத்தம் செய்யும் மையத்தில் பணிபுரிந்து வருவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.