Home Uncategorized புதுக்குடியிருப்பில் யானைகளின் தாக்கத்தினால் வாழ்வாதாரத்தை இழக்கும்  மக்கள்.!

புதுக்குடியிருப்பில் யானைகளின் தாக்கத்தினால் வாழ்வாதாரத்தை இழக்கும்  மக்கள்.!

புதுக்குடியிருப்பில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மந்துவில் , மல்லிகைத்தீவு போன்ற கிராமங்களில் கடந்த இரண்டு , மூன்று தினங்களாக தொடர்ச்சியாக விவசாய காணி, வயல்காணி, தோட்டதோட்டக் காணிகளுக்குள் கூட்டமாக புகுந்த யானைகள் வாழ்வாதாரப் பயிர்களான நெல், தென்னம்பிள்ளை, பயிற்றை, வெண்டி, கச்சான் என்பவற்றை மிதித்து நாசமாக்கியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

புதுக்குடியிருப்பில் யானைகளின் தாக்கத்தினால் வாழ்வாதாரத்தை இழக்கும்  மக்கள்.!-oneindia news


யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய இம்மக்கள் தமது வாழ்வாதாரமாக விவசாயம் மற்றும் தோட்டச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கிராமத்தில் யானையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதனால் தமது வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இப் பிரச்சினை காரணமாக கிராமத்திற்குள் யானை உள்நுழையாதவாறு யானை வேலியினை அமைத்துஅமைத்துத் தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version