புன்னகை தரும் புதனில் உங்கள் ராசிபலன் எப்படி..! {14.2.2024}

மேஷம்
aries-mesham
வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம். நேர்மையான வழிகளில் பணம் சம்பாதிக்க முயலுங்கள். கோபத்தைக் குறைத்தால் ஆரோக்கியம் சீர்படும்.
ரிஷபம்
taurus-rishibum
பிரிந்திருந்த கணவன், மனைவி இணைந்து மகிழ்வர். கல்வியில் மாணவர்களுக்கு நல்ல தேர்ச்சி ஏற்படும். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தனலாபம் உண்டு.
மிதுனம்
gemini-mithunum
பொருளாதார நிலை போற்றும்படியாய் இருக்கும். வசீகரமான பேச்சால் வருமானம் கூடும். வருமான உயர்வால் வளமும் அதிகரிக்கும். விரும்பிய வாகனத்தில் வெளியூர் செல்வீர்கள்.
கன்னி
virgo-kanni
பேச்சுத் திறமையால் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்புப் பெறுவீர்கள். அரசு வழியில் அதிகாரிகளின் உதவியால் ஆதாயம் ஏற்படும். புதுப்புது ஆடைகளும் மனைவியால் நன்மையும் உண்டு.
மகரம்
capricorn-magaram
குடும்பத்தாருடன் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். தொல்லை தந்த நபர்கள் தூரவிலகுவர். முன்னேற்ற வாய்ப்புக்கள் தேடி வரும். அரசு ஆதரவும், அனைத்துக் காரியங்களிலும் வெற்றியும் கிடைக்கும்.
கடகம்
cancer-kadagam
புத்திர பாக்கியம் ஏற்படும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்ப்புக்கு மேல் ஏற்றம் வரும். புண்ணிய கைங்கர்ய ஈடுபாட்டால் புகழ் ஓங்கும். பொதுவாழ்வில் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
சிம்மம்
leo-simmam
மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய நாள். பிறர் துன்பத்தில் மகிழ்ச்சி காணும் எண்ணத்தைக் கைவிடுவது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.
துலாம்
libra-thulam
வியாபாரத்தில் போட்டிகள் குறைவதால் இலாபம் அதிகரிக்கும். பல வழிகளிலும் தனவரவு உண்டு. சிலர் வீடு வாங்கும் எண்ணத்தில் கடனுக்கு முயற்சி செய்வர். புதிய தோழிகளின் தோழமை கிடைக்கும்.
மீனம்
pisces-meenam
கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமான நிலை இருக்கும். வாக்குவன்மையும், புத்திசாலித்தனமும் இணைய வரவுகள் அதிகரிக்கும். பெரியோர் வியாபாரத்தில் தொல்லைகள் நீங்கி, எல்லைகள் விரிந்து ஏற்றம் வரும்.
தனுசு
sagittarius-thanusu
எந்தப் பிரச்சனையையும் எதிர் கொள்ளும் மனோதிடம் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் தேகசுகம் குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் இருக்காது. எனவே, புதிய முயற்சிகளைக் கைவிடுவது நல்லது.
விருச்சிகம்
scorpio-viruchagam
குழந்தைகள் நலனில் அக்கறை அவசியம். இரவுப் பயணங்களில் கவனம் தேவை. அமைதியும், ஆதரவான பேச்சும் எதிர்ப்புக்களைக் குறைக்கும். விழிப்போடு செயல்பட்டால் வியாபாரம் பெருகும்.
கும்பம்
aquarius-kumbam
எவருக்கும் ஜாமீன், மறந்தும் கொடுத்துவிடாதீர்கள். உண்மை நண்பர்களும் உதவத் தயங்குவர். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது.