புலமை பரிசில் பரீட்சை சித்தியடைந்த மாணவர்களுக்கு சற்று முன் வெளியான அறிவிப்பு..!

2023 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை தற்போது இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில்,   2024 ஆம் ஆண்டு தரம் 6க்கான மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையவழி மூலம் 13.02.2024 முதல் 29.02.2024 வரை சமர்ப்பிக்க முடியும்.

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk க்கு பிரவேசிப்பதன் ஊடாக மூன்று பாடசாலைக்காக மேன்முறையீடு செய்ய முடியும் எனவும்  http://g6application.moe.gov.lk/#/ இணையத்தள முகவரி ஊடாக நேரடியாக மேன்முறையீட்டை சமர்ப்பிக்க  முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.