போதைக்கு அடிமையான தமிழ் இராணுவ சிப்பாய் துாக்கில் தொங்கி மரணம் | Tamilwin Online – தமிழ்வின் ஒன்லைன் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online

(தமிழ்வின்) புன்னாலைக்கட்டுவன் அண்ணமார்கோவில், பகுதியில் போதைக்கு அடியமையான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கடந்த காலங்களில் இராணுவத்தில் பணிபுரிந்து இவர் போதைக்கு அடிமையானதால் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டு கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று தனது வீட்டுக்கு முன்னால் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவனில் உள்ள அண்ணமார்கோவில் பகுதியை சேர்ந்த 29வயதுடைய ஈஸ்வரன் சத்தியசீலன்என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

-தமிழ்வின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here