போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்த ஒருவர் மொரட்டுவை- எகொட உயன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபா பெறுமதியான 30 நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியென தெரிவிக்கப்படுகிறது.